/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோவை வேளாண் பல்கலை முதல் பட்டதாரிகள் 52 ஆண்டுக்கு பின் நாமக்கல்லில் 'சங்கமம்' கோவை வேளாண் பல்கலை முதல் பட்டதாரிகள் 52 ஆண்டுக்கு பின் நாமக்கல்லில் 'சங்கமம்'
கோவை வேளாண் பல்கலை முதல் பட்டதாரிகள் 52 ஆண்டுக்கு பின் நாமக்கல்லில் 'சங்கமம்'
கோவை வேளாண் பல்கலை முதல் பட்டதாரிகள் 52 ஆண்டுக்கு பின் நாமக்கல்லில் 'சங்கமம்'
கோவை வேளாண் பல்கலை முதல் பட்டதாரிகள் 52 ஆண்டுக்கு பின் நாமக்கல்லில் 'சங்கமம்'
ADDED : ஜூன் 24, 2024 03:09 AM
நாமக்கல்;கோவை வேளாண் பல்கலையின் முதல் பட்டதாரிகள், 52 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து தங்களின் நினைவுகளை பரிமாறி மகிழ்ந்தனர்.
கோவையில் செயல்பட்டு வந்த அரசு விவசாய கல்லுாரி, 1971ல் தமிழக வேளாண் பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டது. 1968ல் விவசாய கல்லுாரி மாணவர்களாக சேர்ந்த, 152 பேர், 1972ல் பி.எஸ்சி., (அக்ரி) பட்டப் படிப்பை முடித்து, பல்கலையில் முதல் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர். இந்த முன்னாள் மாணவர்களில் பலர், விவசாயத்துறை நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோராக இருந்ததோடு, பலர் அரசுத்துறை மற்றும் வங்கி அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். ஒரு சிலர், தாங்கள் படித்த வேளாண் பல்கலையிலேயே பேராசிரியர்களாகவும் பணியாற்றி உள்ளனர். கோவை வேளாண் பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய முருகேசபூபதியும், முன்னாள் மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள், பட்டம் பெற்று, 52 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக சந்திக்கும், 'முன்னாள் மாணவர்கள் சங்கமம்' நாமக்கல் நளா ஓட்டலில் நேற்று நடந்தது. வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்களில், 50க்கும் மேற்பட்டோர், தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அனைவரும், 70 வயதுக்கு மேற்பட்டோர் என்பதால், பேரன், பேத்திகள் புடைசூழ பங்கேற்று மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை தெரிவித்து நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து, கல்லுாரியில் நடந்த சம்பவங்கள், நிகழ்வுகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர். அதையடுத்து, அனைவரும் கூடி நின்று குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள் கோபிசங்கர், குழந்தைவேலு, ஜெயராமன், ஜனகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.