/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயிகளுக்கு மத்திய அரசின் நலவாரிய அட்டை வினியோகம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நலவாரிய அட்டை வினியோகம்
விவசாயிகளுக்கு மத்திய அரசின் நலவாரிய அட்டை வினியோகம்
விவசாயிகளுக்கு மத்திய அரசின் நலவாரிய அட்டை வினியோகம்
விவசாயிகளுக்கு மத்திய அரசின் நலவாரிய அட்டை வினியோகம்
ADDED : ஜூலை 08, 2024 07:21 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியனில், மத்திய அரசின் நலவாரிய அட்டைகள் வினியோகிக்கப்பட்டது.
மத்திய அரசு நலத்திட்ட பிரிவின், நாமக்கல் மாவட்ட, பா.ஜ., செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கடந்த ஓராண்டாக பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு கட்டுவது மற்றும் விவசாயிகளுக்கான நல வாரிய அட்டை பெறுவது உள்ளிட்ட, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கு பழங்குடியினர் மக்கள் அதிகளவு விண்ணப்பித்திருந்தனர்.
நேற்று, நாமகிரிப்பேட்டை யூனியனில் நாரைக்கிணறு, கார்கூடல்பட்டி, உரம்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 50 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மூத்த வழக்கறிஞர் நல்லதம்பி, ராணுவ பிரிவு நிர்வாகி பலராமன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், திட்டங்கள் குறித்தும் அதில் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்தும் நிர்வாகிகள் விளக்கினர்.