/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆம்னி வேனில் கடத்திய 950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைதுஆம்னி வேனில் கடத்திய 950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது
ஆம்னி வேனில் கடத்திய 950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது
ஆம்னி வேனில் கடத்திய 950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது
ஆம்னி வேனில் கடத்திய 950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது
ADDED : ஜூலை 08, 2024 07:22 AM
நாமக்கல்: ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், 950 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர், மாநிலம் முழுதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதுடன், அதில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறை பறக்கும் படையினருடன் சேர்ந்து, மோகனுார், வள்ளிபுரம் - பாலப்பட்டி சாலையில், எஸ்.வாழவந்தி சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், 19 மூட்டைகளில், 950 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், மோகனுார் அடுத்த மேலப்பாலப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், 34, என்பது தெரியவந்தது. மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்த தினேஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 950 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.