/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்காத 48 நிறுவனங்களுக்கு தடை துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்காத 48 நிறுவனங்களுக்கு தடை
துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்காத 48 நிறுவனங்களுக்கு தடை
துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்காத 48 நிறுவனங்களுக்கு தடை
துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்காத 48 நிறுவனங்களுக்கு தடை
ADDED : ஜூலை 06, 2024 05:53 AM
நாமக்கல் : ''தமிழகத்தில், 3 நிறுவனங்கள் உள்பட, துாய்மை பணியாளர்க-ளுக்கு உரிய சம்பளம் வழங்காத, 48 நிறுவனங்களின் ஒப்பந்தம் தடை செய்யப்பட்டுள்ளன,'' என, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களின் மறு-வாழ்வு சட்டம் அமலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசியதாவது: துாய்மை பணியாளர்கள் நல ஆணையம் என்பது, துாய்மை பணி-யாளர்களின் குறைகளை கண்டறிந்து நிறைவேற்றுவது மட்டு-மல்ல, அவர்களது வாழ்வியலை உயர்த்துவதே இதன் முக்கிய-மான நோக்கமாக இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி தெரி-வித்துள்ளார். அதன்படி, துாய்மை பணியாளர்களுக்கான அடிப்-படை வசதி, ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அவர்களது தேவைகளை நிறை-வேற்றி தரவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆய்-விற்கு செல்லும் போது, துாய்மை பணியாளர்களின் குடியிருப்பு-களில் தங்கி ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து, 100 சதவீதம் தீர்வு காண வேண்டும்.
துாய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மேலும், அவர்-களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுதும் ஒப்பந்த துாய்மை பணியாளர்க-ளுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை, தமிழக அரசுக்கு ஆணை-யத்தால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்று நிறுவனங்கள் உள்பட துாய்மை பணியாளர்-களுக்கு உரிய சம்பளம் வழங்காத, 48 ஒப்பந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்த முறையில் துாய்மை பணியா-ளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள், அவர்க-ளுக்கான வசதிகளை அளிக்க வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்-குனர் வடிவேல், அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.