Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இயற்கை விவசாயிக்கான 'நம்மாழ்வார்' விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இயற்கை விவசாயிக்கான 'நம்மாழ்வார்' விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இயற்கை விவசாயிக்கான 'நம்மாழ்வார்' விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இயற்கை விவசாயிக்கான 'நம்மாழ்வார்' விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : ஜூலை 06, 2024 05:53 AM


Google News
நாமக்கல் : 'சிறந்த இயற்கை விவசாயிக்கான, 'நம்மாழ்வார்' விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வேளாண் துறை மூலம், 2024-25-ம் ஆண்டில், மாநில வேளாண் வளர்ச்சி திட்-டத்தின் கீழ், உயிர்ம (இயற்கை) வேளாண்மையை சிறப்பான முறையில் செய்வதோடு, அதனை பிற விவசாயிகளுக்கும் ஊக்கப்-படுத்தும் விவசாயிகளுக்கு, சிறந்த இயற்கை வேளாண் விவசா-யிக்கான, 'நம்மாழ்வார்' விருது மாநில அளவில், மூன்று விவசா-யிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

முதல் பரிசு, 2.50 லட்சம் ரூபாய், 10,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு, 1.50 லட்சம் ரூபாய், 7,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம், மூன்றாம் பரிசு, ஒரு லட்சம் ரூபாய், 5,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம், தமிழக அரசால், 'நம்மாழ்வார்' விரு-துடன் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை (உயிர்ம) வேளாண்மையில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்திருப்பதுடன், முழுநேர இயற்கை விவசாயியாக இருக்க வேண்டும்.

எந்த விதமான ரசாயன பொருட்களையும் விவசாயத்தில் பயன்ப-டுத்தியிருக்க கூடாது. குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

'நம்மாழ்வார்' விருது பெற விரும்பும், நாமக்கல் மாவட்ட விவ-சாயிகள், 'அக்ரிஸ்நெட்' இணைய தளத்தில், வரும் செப்., 30க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, தங்கள் பகுதி வட்-டார வேளாண் உதவி அலுவலகத்தில், 100 ரூபாய் பதிவுக்கட்-டணம் செலுத்த வேண்டும்.

விபரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்-குனர்கள் அல்லது நாமக்கல், வேளாண் இணை இயக்குனர் அலு-வலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us