ADDED : ஜூன் 24, 2024 03:14 AM
ப.வேலுார்;ப.வேலுார் அருகே, பொத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, டவுன் பஞ்., செயல் அலுவலர் யசோதா மற்றும் துாய்மை பணியாளர்கள், கடந்த, இரு தினங்களாக பொத்தனுார் பகுதிகளில் உள்ள, 20 ஓட்டல் மற்றும் மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு வைத்திருந்த பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்தனர். மேலும், பாலிதீன் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு, 6,750 ரூபாய் அபராதம் விதித்தனர். வணிக நிறுவனங்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துமாறும், பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது துணிப்பை கொண்டு செல்ல வேண்டும் என, பொத்தனுார் செயல் அலுவலர் யசோதா அறிவுறுத்தினார்.