ப.வேலுார்: ப.வேலுார் தேசிய நெடுஞ்சாலை, செக் போஸ்ட் அருகே, ப.வேலுாருக்கு உள்ளே நுழைவாயில் முன்புறம் காய்ந்த மரங்கள், கோழிக்கழிவுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கொட்டி செல்கின்றனர்.
இவ்வழியாக சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் குப்பை கழிவுகளை கொட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ள சிலர், அதற்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுதும் புகை-மூட்டம் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதேபோல், நேற்று காலை மர்ம நபர்கள் கொட்டி கிடந்த குப்பையில் தீ வைத்தனர். இதனால் அப்பகுதி முழுதும் புகைமூட்டம் சூழ்ந்தது. வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.