Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கேரளா வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் விற்பனை சரிவு

கேரளா வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் விற்பனை சரிவு

கேரளா வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் விற்பனை சரிவு

கேரளா வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் விற்பனை சரிவு

ADDED : ஜூலை 17, 2024 09:09 AM


Google News
‍புதுச்சத்திரம், : புதன் சந்தை பகுதியில், நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து குறைந்-ததால் விற்பனை சரிந்தது.

புதுச்சத்திரம் அருகே, புதன் சந்தையில் செவ்-வாய்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு சேந்தமங்கலம், நாமக்கல், வேலகவுண்டம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதி-களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர். கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், லாரிகளில் மாடுகளை மொத்தமாக வாங்கி சந்தைக்கு விற்-பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது, கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வரு-வதால், அங்கிருந்து வரும் வியாபாரிகள் வரத்து, நேற்று குறைந்தது. இதனால், நேற்று நடந்த மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை குறைந்து, 1.60 கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்த-து.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us