/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2024 04:13 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தமிழக தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் முருகசெல்வராசன், ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இதில், ஒன்றியத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளிகளில், காலியாக உள்ள தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, ஒன்றிய பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். மாநில பணிமூப்பை செயல்படுத்தும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.கடந்தாண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, 12 அம்ச கோரிக்கைகளுக்கும் ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* அதேபோல், புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழக தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ரமேஷ் தலைமை வகித்தார்.