ஐ.நா. கூட்டத்தில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர்: டிரம்ப் ஆவல்
ஐ.நா. கூட்டத்தில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர்: டிரம்ப் ஆவல்
ஐ.நா. கூட்டத்தில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர்: டிரம்ப் ஆவல்
ADDED : செப் 21, 2025 08:08 AM

நியுயார்க்; ஐநா சபைக் கூட்டத்தில் 20 நாடுகளின் தலைவர்கள் தம்மை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
ஐநா சபை கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப்.23ம் தேதி தொடங்கி செப்.29ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செப்.23ம் தேதி உரையாற்றுகிறார்.
இந் நிலையில், டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐ.நா.வில் நிறைய நாடுகளின் தலைவர்களை நான் சந்திக்கப் போகிறேன். அநேகமாக 20 பேரை சந்திப்பேன். அனைவரும் என்னை சந்திக்க விரும்புகிறார்கள்.
நாங்கள் இப்போது ஆப்கானிஸ்தானுடன் பேசிக்கொண்டிருக்கிறோம், அதை (பாக்ராம் விமானப்படைத்தளம்) நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம்.
விரைவில் அதை நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம். அவர்கள் (தாலிபான்கள்) அதை செய்யாவிட்டால், நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
பாக்ராம் விமானப்படைத் தளத்தின் பின்னணி;
2001ம் ஆண்டில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடியாக, அதற்கு காரணமாக இருந்த பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்கா வேட்டையாடியது. பின்லேடன் உயிருடன் இருக்கும் போது அவனை ஒப்படைக்க ஆப்கானிஸ்தானை அப்போது ஆண்டு வந்த தாலிபான்கள் மறுத்ததால் அங்கு போர் தொடுத்து, அவர்களை ஆட்சியில் இருந்து அமெரிக்கா விரட்டியது.
பின்லேடனை அழித்த பின்னர், 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானப் படைத் தளத்தில் இருந்து அமெரிக்க வீரர்கள் சொந்த நாடு திரும்பினர். அதன் பின்னர் தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் அரசை திரும்பவும் கைப்பற்றினர். பாக்ராம் விமானப்படைத் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
2021ம் ஆண்டுக்கு பின்னர் இப்போது மீண்டும் பாக்ராம் விமானப் படைத் தளம் பற்றி டிரம்ப் பேசியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த எச்சரிக்கையை தாலிபான் அரசு புறம்தள்ளி உள்ளது. தங்கள் நாட்டின் பாக்ராம் விமானப் படைத் தளத்தை அமெரிக்கா மீண்டும் கைப்பற்ற முடியாது என்று தாலிபான் அரசு திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது.