ADDED : மார் 12, 2025 08:07 AM
நாமக்கல்: திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த மங்களம்புதுாரை சேர்ந்தவர் முத்துவீரன் மகன் வேல்முருகன், 24; தனியார் பஸ் கண்டக்டர். இவர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில், மோகனுார் - நாமக்கல் சாலையில் சென்று கொண்-டிருந்தார். இவருக்கு முன்னாள் தனியார் பஸ் ஒன்று சென்று-கொண்டிருந்தது.
டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்-போது நிலை தடுமாறிய வேல்முருகன், மொபட்டுடன் பஸ்சின் பின் பகுதியில் மோதினார். இதில், தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வேல்முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.