/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கூடுதல் ஓய்வூதியம் கேட்டு ஓய்வு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கூடுதல் ஓய்வூதியம் கேட்டு ஓய்வு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கூடுதல் ஓய்வூதியம் கேட்டு ஓய்வு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கூடுதல் ஓய்வூதியம் கேட்டு ஓய்வு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கூடுதல் ஓய்வூதியம் கேட்டு ஓய்வு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2025 08:06 AM
நாமக்கல்: கூடுதல் ஓய்வூதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அண்ணா-துரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கருப்பண்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். அதில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, 70 வயது ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி, 80 வயதை எட்டியவுடன், 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூ-திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, ரயில் கட்டண சலுகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர்.