/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குமாரபாளையம் அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி குமாரபாளையம் அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி
குமாரபாளையம் அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி
குமாரபாளையம் அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி
குமாரபாளையம் அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி
ADDED : ஜூலை 07, 2024 07:13 AM
குமாரபாளையம் :குமாரபாளையம் அரசு கலை கல்லுாரியில், மாவட்ட வேலை-வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் மணி, இலவச வகுப்பை தொடங்கி வைத்து, போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிமுறைகளை விளக்-கினார்.
பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ஞானதீபன், ரமேஷ்-குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.