/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 17, 2024 09:13 AM
ப.வேலுார் : ப.வேலுார் போலீசார் மற்றும் வருவாய்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய ஊர்வலம், பள்ளி சாலை வழியாக சென்று, மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. ஏ.டி.எஸ்.பி., தனராசு, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, தாசில்தார் முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, டிராபிக் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், எஸ்.ஐ., ஆனந்த், ப.வேலுார் கிராம நிர்வாக அலுவலர் மைதிலி, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.