ADDED : மார் 23, 2025 01:28 AM
படம் ஒட்டிய பா.ஜ.,வினர் கைது
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், டாஸ்மாக் கடை முன் பா.ஜ.,வினர் முதல்வரின் படத்தை ஒட்டியதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு பா.ஜ., சேந்தமங்கலம் ஒன்றிய தலைவர் பாண்டியன் தலைமையில், ஜங்கலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, 10க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர் கருப்பு கொடிகளுடன் சென்றனர்.
அங்கிருந்த போலீசார், டாஸ்மாக் பணியாளர்கள் ஒட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். பின், கிளை செயலாளர் ராசம்மாள், 70, டாஸ்மாக் கடை முன் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினார். பின்னர், பச்சுடையாம்பட்டி கடைக்கு சென்று அங்கும் முதல்வரின் படத்தை ஒட்டினர்.
ஒ.பி.சி., அணி முன்னாள் மாவட்ட தலைவர் கணபதி, ஒன்றிய பொது செயலாளர் சிவா, குமரவேல், சேகர், வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்களை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர்.