ADDED : மார் 23, 2025 01:24 AM
மூதாட்டி வீட்டில் பணம் திருட்டு
ப.வேலுார்:-பரமத்தி அருகே வில்லிபாளையத்தை சேர்ந்த ராசம்மாள், 80, கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு, கூலி வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 35 ஆயிரம் ரூபாய், அரை பவுன் மோதிரம் காணாமல் போனது தெரிய வந்தது.
பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.