/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மழைநீர் வடிகால் அமைக்கமுத்தரப்பு பேச்சுவார்த்தை மழைநீர் வடிகால் அமைக்கமுத்தரப்பு பேச்சுவார்த்தை
மழைநீர் வடிகால் அமைக்கமுத்தரப்பு பேச்சுவார்த்தை
மழைநீர் வடிகால் அமைக்கமுத்தரப்பு பேச்சுவார்த்தை
மழைநீர் வடிகால் அமைக்கமுத்தரப்பு பேச்சுவார்த்தை
ADDED : மார் 18, 2025 01:38 AM
மழைநீர் வடிகால் அமைக்கமுத்தரப்பு பேச்சுவார்த்தை
திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சி, 1, 7, 8, 10 ஆகிய வார்டு பகுதிகளில் இருந்து, மழைநீர், கழிவுநீரை வடிகால் மூலம் கொண்டு செல்ல, சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். மேலும், மழைநீர் வடிகால்களில் மண்ணை கொட்டி அடைத்தனர். இரண்டு தரப்பினரும் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து, இரு தரப்பினர் மற்றும் நகராட்சி தரப்பையும் இணைத்து, நேற்று ஆர்.டி.ஓ., சுகந்தி முன்னிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
ஒவ்வொரு தரப்பிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. பின், இரு தரப்பையும் ஒன்றாக அமர வைத்து பேச்சு நடத்தினர். ஆனால், சுமுக முடிவு எட்டாததால், 'மீண்டும் வரும், 22ல் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும்; அதுவரை இரு தரப்பும் சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த கூடாது; மீறினால் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆர்.டி.ஓ., எச்சரிக்கை விடுத்தார்.