/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 1,600 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு அமைச்சர் மதிவேந்தன் தகவல் 1,600 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு அமைச்சர் மதிவேந்தன் தகவல்
1,600 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு அமைச்சர் மதிவேந்தன் தகவல்
1,600 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு அமைச்சர் மதிவேந்தன் தகவல்
1,600 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு அமைச்சர் மதிவேந்தன் தகவல்
ADDED : மார் 12, 2025 08:06 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில், நேற்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், 400 கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ''நாமக்கல் மாவட்டம் முழுவதும், 1,600 கர்ப்பிணிகளுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது. கர்ப்பிணி தாய்மார்கள் வளையல் அணிவதால், தங்கள் குழந்தைகளுக்கு வளையல் ஓசை மகிழ்ச்சி அளிக்கும் என, பெரியோர்களின் கலாசார வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார். ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலு-வலர் சசிகலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.