/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயிகளை தற்கொலையில் இருந்து மீட்க கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்த கோரிக்கை விவசாயிகளை தற்கொலையில் இருந்து மீட்க கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்த கோரிக்கை
விவசாயிகளை தற்கொலையில் இருந்து மீட்க கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்த கோரிக்கை
விவசாயிகளை தற்கொலையில் இருந்து மீட்க கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்த கோரிக்கை
விவசாயிகளை தற்கொலையில் இருந்து மீட்க கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 08:09 AM
நாமக்கல் ; 'கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க, விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கி-ணைப்பாளர் பெருமாள் தலைமையிலான நிர்-வாகிகள், எம்.பி., மாதேஸ்வரனிடம் மனு அளித்-தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உற்பத்தி செலவுடன், ஒன்றரை மடங்கு கூடுதலாக, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது, சட்-டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட-வற்றை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மின் துறையை தனியார் மயமாக்க கூடாது. உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள், மின்சாரம், நீர்ப்பாசனம், இயந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற விவசாய இடுபொருள்களுக்கு, ஜி.எஸ்.டி., கூடாது.மீண்டும் மானியம் வழங்குவதுடன் பங்குதா-ரர்கள், குத்தகை விவசாயிகளுக்கு, அரசின் திட்-டங்களின் பலன்களை விரிவுபடுத்த வேண்டும். அனைத்து பயிர்களுக்கும், கால்நடை வளர்ப்-பிற்கும், பொதுத்துறையின் கீழ் விரிவான காப்பீடு திட்டத்தை கொண்டு வர வேண்டும். விவசாயி-களை தற்கொலையில் இருந்து பாதுகாக்க, விரி-வான கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.