/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோவில் விழாவில் மோதல் 7 பேர் மீது வழக்கு கோவில் விழாவில் மோதல் 7 பேர் மீது வழக்கு
கோவில் விழாவில் மோதல் 7 பேர் மீது வழக்கு
கோவில் விழாவில் மோதல் 7 பேர் மீது வழக்கு
கோவில் விழாவில் மோதல் 7 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2024 12:15 AM
நாமகிரிப்பேட்டை : கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த வேம்பாகவுண்டம்புதுார் கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, கடந்த வாரம், 4 நாட்கள் கோலாகலமாக நடந்து முடிந்தது. மறு பூஜைக்காக, நேற்று கிடா வெட்டி விருந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திடீ-ரென இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில், காயமடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், முத்துசாமி தரப்பு கொடுத்த புகார்படி, ஐயனார், சங்கர், ரகுபதி, சீனிவாசன் ஆகிய, 4 பேர் மீதும்; ஐயனார் கொடுத்த புகார்படி, முத்துசாமி, சிவப்பிரகாசம், மினியன் ஆகிய, 3 பேர் என, மொத்தம், 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்-றனர்.