/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காளியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம் காளியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
காளியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
காளியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
காளியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED : ஜூலை 22, 2024 08:18 AM
மோகனுார், ; மோகனுாரில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி பவுர்ணமி அன்று, 108 பால்குட அபிஷேகம் செய்வது வழக்கம்.இந்தாண்டு, 23ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வல-மாக வந்தனர். அக்ரஹாரம், காளியம்மன் கோவில் தெரு வழியாக வந்து கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவ-ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.