/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வாரச்சந்தை பகுதியில் ஆய்வு பணியில் கலெக்டர் வாரச்சந்தை பகுதியில் ஆய்வு பணியில் கலெக்டர்
வாரச்சந்தை பகுதியில் ஆய்வு பணியில் கலெக்டர்
வாரச்சந்தை பகுதியில் ஆய்வு பணியில் கலெக்டர்
வாரச்சந்தை பகுதியில் ஆய்வு பணியில் கலெக்டர்
ADDED : மார் 21, 2025 01:31 AM
வாரச்சந்தை பகுதியில் ஆய்வு பணியில் கலெக்டர்
ராசிபுரம்:ராசிபுரம் தாலுகா பிள்ளாநல்லுார், அத்தனுார் மற்றும் பட்டணம் டவுன் பஞ்சாயத்து, ராசிபுரம் நகராட்சி மற்றும் ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் கலெக்டர் உமா பல்வேறு திட்டங்களுக்காக நடந்து வரும், 5 கோடி ரூபாய்க்கான பணிகளை ஆய்வு செய்தார்.
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்தில், 1.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டவுன் பஞ்சாயத்தில், 1.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் உமா நேற்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, பிள்ளாநல்லுார் கிழக்கு தெருவில் அம்ரித் திட்டத்தின் கீழ், 31 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணியை பார்வையிட்ட கலெக்டர், அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகள், மக்கள் தொகை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ராசிபுரம் நகராட்சி, சந்திரசேகரபுரம், தெற்குபட்டியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் இருப்பு, விற்பனை விபரம் குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும் ராசிபுரம் நகராட்சியில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக வாரச்சந்தை கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, சந்தையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள மொத்த கடைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.