/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோடை தாக்கம் அதிகரிப்பால் 'பசுமை பந்தல்' அமைக்கலாமே கோடை தாக்கம் அதிகரிப்பால் 'பசுமை பந்தல்' அமைக்கலாமே
கோடை தாக்கம் அதிகரிப்பால் 'பசுமை பந்தல்' அமைக்கலாமே
கோடை தாக்கம் அதிகரிப்பால் 'பசுமை பந்தல்' அமைக்கலாமே
கோடை தாக்கம் அதிகரிப்பால் 'பசுமை பந்தல்' அமைக்கலாமே
ADDED : மார் 21, 2025 01:31 AM
கோடை தாக்கம் அதிகரிப்பால் 'பசுமை பந்தல்' அமைக்கலாமே
நாமக்கல்:நாமக்கல்லில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.நாமக்கல்லில், முக்கிய சாலைகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைந்துள்ளன. அந்த வழியே செல்லும் வாகன ஓட்டுனர்கள், சிக்னல் விழும்போது நின்று செல்கின்றனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் சோர்வுடன் நின்கின்றனர். எனவே, கோடை காலம் முடியும் வரை, நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கியமான, 7 போக்குவரத்து சிக்னல்களில், கடந்தாண்டு போல் தற்போதும் 'பசுமை பந்தல்' அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.