Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.வேலுார் டவுன் பஞ்.,சார்பில் மரக்கன்று நடல்

ப.வேலுார் டவுன் பஞ்.,சார்பில் மரக்கன்று நடல்

ப.வேலுார் டவுன் பஞ்.,சார்பில் மரக்கன்று நடல்

ப.வேலுார் டவுன் பஞ்.,சார்பில் மரக்கன்று நடல்

ADDED : மார் 21, 2025 01:30 AM


Google News
ப.வேலுார் டவுன் பஞ்.,சார்பில் மரக்கன்று நடல்

ப.வேலுார்:-ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில், சாலை ஓரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ள குப்பையை அகற்றிவிட்டு, அந்த பகுதிகளில் நிழல் தரும் மரங்களை நடும் நிகழ்ச்சியை, ப.வேலுார் செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை டவுன் பஞ்., ஊழியர்கள் மூலம் நடப்பட்டது.

இதுகுறித்து, செயல்அலுவலர் (பொ) மூவேந்தரபாண்டியன் கூறுகையில்,'' நிழல் தரும் மரங்கள் தேவைப்படும் பொது மக்கள், டவுன் பஞ்., அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். கோடை காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட, டவுன் பஞ்சாயத்து இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.

துப்புரவு மேற்பார்வையாளர்கள் வெங்கடேஷ், ஜனார்த்தனன், தாமரைச்செல்வி உள்பட டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us