/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/நெல் கொள்முதல் அடாவடி நாகையில் கலெக்டர் அதிரடிநெல் கொள்முதல் அடாவடி நாகையில் கலெக்டர் அதிரடி
நெல் கொள்முதல் அடாவடி நாகையில் கலெக்டர் அதிரடி
நெல் கொள்முதல் அடாவடி நாகையில் கலெக்டர் அதிரடி
நெல் கொள்முதல் அடாவடி நாகையில் கலெக்டர் அதிரடி
ADDED : பிப் 25, 2024 01:57 AM

நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில், 97,437 ஏக்கரில் சம்பா, 53,960 ஏக்கரில் தாளடி என, 1 லட்சத்து, 51,397 ஏக்கரில் சாகுபடி பணிகள் நடந்துள்ளன. பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் இன்னலுக்கு உள்ளான விவசாயிகள், சிரமத்துக்கு இடையில் சம்பா அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. இவற்றை கண்காணிக்க, கண்காணிப்பு குழுவை நியமிக்காததால், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம், 40 கிலோ எடைக்கு பதில், 42 கிலோ கொள்முதல் செய்யும் ஊழியர்கள், மூட்டைக்கு, 50 ரூபாய் என, கட்டாய வசூல் செய்கின்றனர்.
இதை தடுக்க வேண்டிய முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
நுகர்பொருள் அலுவலர்களை நேரில் அழைத்து எச்சரித்த கலெக்டர், விவசாயிகளிடம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆடியோ பதிவு செய்து வெளியிட்டார்.
மேலும், நேரடி ஆய்வில், குருக்கத்தி, நீலப்பாடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் அதிக எடையில் கொள்முதல் செய்தது தெரிய வந்ததால், பட்டியல் எழுத்தர்களுக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்த கலெக்டர், கீழ்வேளூரில் பருவகால உதவியாளரை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.