/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ மின்மாற்றிகளில் காப்பர் ஒயர் திருட்டு; சிதம்பரம் ஆசாமிகள் உட்பட 4 பேர் கைது மின்மாற்றிகளில் காப்பர் ஒயர் திருட்டு; சிதம்பரம் ஆசாமிகள் உட்பட 4 பேர் கைது
மின்மாற்றிகளில் காப்பர் ஒயர் திருட்டு; சிதம்பரம் ஆசாமிகள் உட்பட 4 பேர் கைது
மின்மாற்றிகளில் காப்பர் ஒயர் திருட்டு; சிதம்பரம் ஆசாமிகள் உட்பட 4 பேர் கைது
மின்மாற்றிகளில் காப்பர் ஒயர் திருட்டு; சிதம்பரம் ஆசாமிகள் உட்பட 4 பேர் கைது
ADDED : ஜூலை 23, 2024 12:13 AM
மயிலாடுதுறை: மின்மாற்றிகளில் காப்பர் ஒயர் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அத்தியூர், கூத்தியம்பேட்டை, ஆச்சாள்புரம் கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளில் இருந்த காப்பர் ஒயர் திருடு போயுள்ளதாக மின்வாரிய உதவி பொறியாளர் மகேஸ்வரி கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த தீத்தம்பாளையம் மாரியப்பன் மகன் தினகரன்,22; புவனகிரி புதுப்பேட்டை ஆறுமுகம் மகன் வேலு,36; மணி மகன் மதன்,30; மற்றும் கொள்ளிடம் அடுத்த நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சுதன்,31; ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், 4 பேரும் கூட்டாக சேர்ந்த மணல்மேடு, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடியது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் வேறு எங்கேயும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.