/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ குழந்தையை கொன்று தாய் தற்கொலை கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்
குழந்தையை கொன்று தாய் தற்கொலை கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்
குழந்தையை கொன்று தாய் தற்கொலை கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்
குழந்தையை கொன்று தாய் தற்கொலை கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்
ADDED : ஜூன் 12, 2024 06:49 PM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே குழந்தையை கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லுார் ஜெயராஜ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்,30; ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா,25; திருமணமாகி 2 ஆண்டாகும் இவர்களுக்கு ஆரியன் என்கிற 9 மாத ஆண் குழந்தை இருந்தது.
விக்னேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதில் மனமுடைந்த சங்கீதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை துாக்கில் தொங்கவிட்டு, தானும் துாக்கில் தொங்கினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது இருவரும் இறந்தனர்.
இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டே ஆவதால், வரதட்சணை கொடுமையா என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.