/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ ஆதீனத்தை மிரட்டிய வழக்கு வாரணாசியில் பதுங்கியவர் கைது ஆதீனத்தை மிரட்டிய வழக்கு வாரணாசியில் பதுங்கியவர் கைது
ஆதீனத்தை மிரட்டிய வழக்கு வாரணாசியில் பதுங்கியவர் கைது
ஆதீனத்தை மிரட்டிய வழக்கு வாரணாசியில் பதுங்கியவர் கைது
ஆதீனத்தை மிரட்டிய வழக்கு வாரணாசியில் பதுங்கியவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 08:27 PM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாக கூறி, சிலர் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.
இது தொடர்பாக, ஆதீனத்தின் சகோதரர் விருதகிரி, பிப்ரவரியில் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். ஆதீனத்தின் முன்னாள் உதவியாளர் திருவையாறு செந்தில் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், பா.ஜ., மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு மற்றும் வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில், தி.மு.க.,வை சேர்ந்த திருக்கடையூர் விஜயகுமார், செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வந்தனர். போலீசார் தேடிய முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதையடுத்து, மயிலாடுதுறை தனிப்படை போலீசார் வாரணாசி சென்று, அங்கு மொட்டை அடித்து, தாடியுடன் பதுங்கி இருந்த செந்திலை கைது செய்தனர்.