/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ தி.மு.க., எம்.எல்.ஏ., கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் தி.மு.க., எம்.எல்.ஏ., கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
தி.மு.க., எம்.எல்.ஏ., கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
தி.மு.க., எம்.எல்.ஏ., கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
தி.மு.க., எம்.எல்.ஏ., கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
ADDED : ஜூலை 18, 2024 11:35 PM
மயிலாடுதுறை:ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., கார், பைக் மீது மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன். தி.மு.க.,வை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் காரைக்கால் சென்றுவிட்டு காரில் ரிஷிவந்தியம் புறப்பட்டார். காரை, கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுாரை சேர்ந்த மணிவண்ணன் ஓட்டினார்.
கார், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி என்.என்.சாவடி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எருக்கட்டாஞ்சேரியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன்,18; 12ம் வகுப்பு மாணவர் செல்வகுமார்,16; ஆகியோர் கிராம சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாயை கடக்க முயன்றனர்.
அதனை கண்டு திடுக்கிட்ட எம்.எல்.ஏ.,வின் கார் டிரைவர், பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார். இருப்பினும் கார், பைக் மீது மோதிவிட்டு அருகில் இருந்த கார்த்திக் என்பவரது வீட்டின் போர்டிகோவில் புகுந்தது. அதில், போர்டிகோவில் நிறுத்தியிருந்த கார் மற்றும் பைக் சேதமைடந்தன.
விபத்தில் பைக்கில் வந்த மணிகண்டன், செல்வகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை, அவ்வழியே வந்த டி.ஆர்.ஓ., மணிமேகலை தனது காரில் பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து வீட்டின் உரிமையாளர் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் பைக்கை கவனக்குறைவாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக மணிகண்டன் மீது பொறையார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.