Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வீடுகளில் ஜன.16ல் மீனாட்சி அம்மன் அவதார தின வழிபாடு

வீடுகளில் ஜன.16ல் மீனாட்சி அம்மன் அவதார தின வழிபாடு

வீடுகளில் ஜன.16ல் மீனாட்சி அம்மன் அவதார தின வழிபாடு

வீடுகளில் ஜன.16ல் மீனாட்சி அம்மன் அவதார தின வழிபாடு

ADDED : ஜன 08, 2025 05:12 AM


Google News
மதுரை : திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் அவதார தின சிறப்பு வழிபாடு தை மாதம் மகம் நட்சத்திரத்தில் (ஜன.16) கொண்டாடப்படுகிறது.

இது குறித்து ஆராய்ச்சி மைய மேனேஜிங் டிரஸ்டி கே.சந்திரசேகரன் கூறியதாவது: திருவிளையாடல் புராணத்தில் அம்மையின் தாயான காஞ்சனமாலையின் முன்ஜென்மத்தில் ஒரு தை மாதம் தொடங்கி மறு தை மாதம் வரை கடும் விரதம் இருந்ததாலும், மலையத்துவஜ பாண்டியன் செய்த யாகத்தின் பயனாகவும் யாக குண்டத்தில் மகம் நட்சத்திர நாளில் மீனாட்சி அம்மை தோன்றியதாக பரஞ்சோதி முனிவர் தெரிவிக்கிறார்.

ஜன.16 அன்று தை மகம் நட்சத்திரம் வருகிறது. அன்று பக்தர்கள் தங்கள் இருப்பிடத்தில் அம்மனின் திருவுருவச்சிலை அல்லது படத்திற்கு அலங்காரம் செய்து விளக்கேற்ற வேண்டும். திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிட்டுள்ள அம்மனின் 108 போற்றிகளை பாடி ஆராதித்து மீனாட்சி அம்மன் அருள்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94433 52246ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us