ADDED : மே 27, 2025 01:12 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் அகிம்சை, உலக அமைதி குறித்த கருத்தரங்கு நடந்தது. மடோனா கல்லுாரி மாணவி சலோமியா வரவேற்றார்.
செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். பெங்களூரு பேராசிரியர் அபிதா பேகம் பேசுகையில்,''காந்தியின் அகிம்சை கொள்கை உலக அமைதிக்கு வழிவகுக்கும். இக்கொள்கையை பின்பற்றி பலர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர்'' என்றார். பாத்திமா கல்லுாரி மாணவி சபிதா நன்றி கூறினார்.