ADDED : செப் 21, 2025 04:46 AM
மதுரை: மதுரை தத்தனேரி கணேசபுரத்தைச் சேர்ந்த வர் சரத்குமார் 31. வெல்டிங் தொழிலாளி.
இவரும், சக தொழிலாளர்கள் 2 பேரும் ஒருவாரமாக ஒத்தக்கடை அருகேயுள்ள முண்ட நாயகம் பகுதி தோட்டத்தில் வேலை செய்தனர்.
இதற்கான கூலியை மற்றவர்களுக்கும் சேர்த்து உரிமையாளரிடம் இருந்து சரத்குமார் பெற்றுக்கொண்டார். அதை தங் களுக்கு தராதது குறித்து சக தொழிலாளி கணேச புரத்தைச் சேர்ந்த மணி கண்டன் 30, கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
நேற்றுமுன்தினம், வேலை செய்த தோட்டத்தில் துாங்கிக்கொண்டிருந்த சரத்குமாரை மணிகண்டன் வெட்டி கொலை செய்தார். அவரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்தனர்.