/உள்ளூர் செய்திகள்/மதுரை/பெண்களை கொண்டாட வேண்டும்: இந்திரா செளந்தர்ராஜன் பேச்சுபெண்களை கொண்டாட வேண்டும்: இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
பெண்களை கொண்டாட வேண்டும்: இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
பெண்களை கொண்டாட வேண்டும்: இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
பெண்களை கொண்டாட வேண்டும்: இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
ADDED : பிப் 06, 2024 12:40 AM
மதுரை : பெண்களை தலையில் வைத்து கொண்டாட வேண்டும் என எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.
மதுரை சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளையில் ஸ்ரீ மஹா பெரியவரின் மாதாந்திர நட்சத்திர அனுஷ உற்ஸவம் நடந்தது. விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் குரு மகிமை எனும் தலைப்பில் பேசியதாவது:
நம்முடைய மதத்துக்கு உண்மையில் பொருந்துகிற பெயர் வேத மதம் என்பது தான். நமக்கெல்லாம் வேதங்கள் தான் எல்லாம். உயிர்களைப் படைப்பதற்கு முன்பே அந்த பரம்பொருள் வேதத்தை தான் முதலில் படைத்தான். நம்மை எல்லாம் படைக்கும் முன் இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதில் வேதத்தை முதலில் உருவாக்கி, அதை ஒப்படைக்க பிரம்மனை படைத்து அவன் மூலம் நமக்கெல்லாம் வழியை காட்டினான். அதுவே பிரம்மம் என்றானது.
சகல ஜீவராசிகளுக்குள்ளும் இருப்பது பிரம்மமே. பிரம்மத்தை உணர்வதே பிறப்பின் முதல் கடமை என்று யாருக்கு சொல்லப்பட்டதோ அவனே பிரம்மண்யன் எனும் பிராம்மணன் ஆவான்.இவன் கடமையே பிரம்மத்தை அறிதல் அதை தன்னுள் காத்தல் பிறருக்கும் அதை உணர்த்துதல் தான். இவன் அதை விட்டு விலகவே கூடாது.
வேத மதத்தில் பெண்கள் பங்கு மிக பெரியது. ஒரு ஆர்யாம்பாள் தன் பிள்ளை சன்யாசியாக சம்மதித்திருக்கா விட்டால் நமக்கு ஆதிசங்கரர் கிடைத்திருக்க மாட்டார். திலகவதியார் இல்லாது போனால் திருநாவுக்கரசர் கிடைத்திருக்க மாட்டார். எனவே பெண் மக்களை நாம் தலைமேல் வைத்து கொண்டாட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
ஏற்பாடுகளை டாக்டர் டி. ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கடரமணி, கே.ஸ்ரீகுமார், ராமகிருஷ்ணன், ஸ்ரீராமன், பரத்வாஜ், ஸ்ரீதர், ராதாகிருஷ்ணன், சங்கர் ராமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முள்ளிப்பள்ளம்
சோழவந்தான் முள்ளிப்பள்ளம் கிளை மடத்திலும் காஞ்சி மஹா பெரியவரின் அனுஷ நட்சத்திர உற்ஸவம் கொண்டாடப்பட்டது. மஹா பெரியவர் படத்திற்கு பூஜை ஆராதனைகள் செய்யப்பட்டன.