ADDED : ஜூன் 08, 2025 04:26 AM
திருமங்கலம் : மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளராக 2020 முதல் இருப்பவர் ஆர்யா 36.
இவர் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஆதரவாக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வந்தார். சில மாதங்களாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்த அவர் குடும்பச்சூழலால் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக உதயகுமாரிடம் கடிதம் வழங்கினார்.