/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இணைப்பு சாலை பணியை எப்போதுதான் முடிப்பீங்களோ இணைப்பு சாலை பணியை எப்போதுதான் முடிப்பீங்களோ
இணைப்பு சாலை பணியை எப்போதுதான் முடிப்பீங்களோ
இணைப்பு சாலை பணியை எப்போதுதான் முடிப்பீங்களோ
இணைப்பு சாலை பணியை எப்போதுதான் முடிப்பீங்களோ
ADDED : மே 22, 2025 04:28 AM

மேலுார்: மேலுாரில், காரைக்குடி நான்கு வழிச்சாலை துவங்கும் இடத்தில் இணைப்பு சாலை போடாமல் 2 ஆண்டுகளுக்கு மேல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மேலுார் - காரைக்குடி வரை 4 வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடக்கிறது. இதில் மேலுாரில் இருந்து 4 வழிச் சாலை துவங்கும் இடத்தில், பிற மாவட்ட வாகனங்கள் மேலுாருக்குள் செல்லவும், மேலுாரில் இருந்து வெளியேறும் வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக செல்ல சந்திப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் இணைப்பு சாலைக்காக பள்ளம் தோண்டி பெயரளவுக்கு ஜல்லிக்கற்கள் பரப்பினரே தவிர, ரோடு அமைக்கவில்லை. அதனால் சென்னைக்கு 4 வழிச்சாலையில் செல்லும் வாகனங்கள் இரவு நேரம் போதுமான வெளிச்சம் இன்றி பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பதை உணர்த்த அறிவிப்பு பலகை, ஒளிரும் ஸ்டிக்கரும் ஒட்டவில்லை. பெயரளவுக்கு ஆங்காங்கே டிரம் மட்டுமே வைத்துள்ளனர். மேலுாரில் இருந்து வெளியேறும் வாகனங்களும், பள்ளத்தால் பல கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. விபத்தை தவிர்க்க அறிவிப்பு பலகை வைப்பதோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.