/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குருவித்துறை சிற்றணையில் எச்சரிக்கை பலகை குருவித்துறை சிற்றணையில் எச்சரிக்கை பலகை
குருவித்துறை சிற்றணையில் எச்சரிக்கை பலகை
குருவித்துறை சிற்றணையில் எச்சரிக்கை பலகை
குருவித்துறை சிற்றணையில் எச்சரிக்கை பலகை
ADDED : ஜூலை 04, 2025 03:20 AM
மதுரை: விருதுநகர் கூமாபட்டி குறித்த 'ரீல்ஸ்'க்கு போட்டியாக மதுரை குருவித்துறை சிற்றணை குறித்து 'ரீல்ஸ்' வெளியான நிலையில் உள்ளூர் மக்கள் ஆபத்தை உணராமல் தினமும் கூடுகின்றனர். இதனால் நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
பேரணையில் இருந்து சிற்றணை தடுப்பணை வரை வைகையாறு வழியாக செல்லும் தண்ணீர், தென்கரை பாசனத்திற்காக தனி கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. குருவித்துறையில் தென்கரை கால்வாய் முகப்பு பகுதி உள்ளது. வைகையாற்றுக்கும் கால்வாய் முகப்பு பகுதிக்கும் இடையே வண்டல் (சேறு) படிந்துள்ளது.
தென்கரை கால்வாய் வழியாக தென்கரை கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிற்றணையில் தண்ணீர் அருவி போல கொட்டுவதால், இங்குள்ள ஓரடி நீள அகல படிக்கட்டில் இறங்கி உள்ளூர் மக்கள் குளிக்கின்றனர்.
தடுப்பணையை ஒட்டியே தென்கரை கால்வாய் முகப்பு உள்ளதால் சிலர் ஆபத்தை உணராமல் தென்கரை கால்வாய் முகப்பு பகுதிக்கு செல்வதால் சேற்றில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே நீர்வளத்துறை சார்பில் இங்கு குளிக்கக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.