/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உத்தங்குடியில் ஆதரவற்ற முதியவர் மீட்பு உத்தங்குடியில் ஆதரவற்ற முதியவர் மீட்பு
உத்தங்குடியில் ஆதரவற்ற முதியவர் மீட்பு
உத்தங்குடியில் ஆதரவற்ற முதியவர் மீட்பு
உத்தங்குடியில் ஆதரவற்ற முதியவர் மீட்பு
ADDED : ஜூலை 04, 2025 03:20 AM
மதுரை: மதுரை உத்தங்குடியில் 70 வயது முதியவர் உடல்நலம் பாதித்து ரோட்டோரம் வாய், மூக்கு பகுதியில் மணல் நிரம்பி சுவாசிக்க வழியின்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் செஞ்சிலுவை சங்கத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் செயலாளர் ராஜ்குமார், அறிவழகன் ஆகியோர் உடனே அங்கு சென்று அந்த முதியவரை மீட்டனர். முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கிடைக்க வழிசெய்தனர்.
அவரது குடும்பம் திருமோகூரில் இருப்பதாகவும், உடல்நலம் பாதித்ததால் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் வசிப்பதாகவும், 2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி துர்நாற்றத்துடன் கிடந்துள்ளார்.
அவரை குடும்பத்தினருடன் சேர்க்க செஞ்சிலுவை சங்கத்தினர் முயற்சி எடுத்துள்ளனர்.