ADDED : செப் 23, 2025 04:30 AM
மதுரை: மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர், அவரைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கில் செப். 25 அன்று மதியம் 3:00 மணி முதல் நடக்க உள்ளது.
பிரவீன் குமார் தலைமை வகிப்பார். மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவரை சேர்ந்தவர்கள் அன்று மதியம் 2:30 மணிக்கு இதில் பங்கேற்கலாம். தங்கள் குறைகளை இரட்டை பிரதிகளில் மனுவாக, கலெக்டரிடம் நேரடியாக வழங்கி தீர்வு காணலாம்.