ADDED : செப் 23, 2025 04:30 AM
மதுரை: மதுரை அவனியா புரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் நவராத்திரி துவக்க விழாவை முன்னிட்டு, நுாலக புத்தகக் கொலு திருவிழா நடந்தது.
நுாலகர் பூம்பாவை வரவேற்றார். முதல்வர் கவிதா, புத்தகக் கொலுவின் முக்கியத்துவம், வாசிப்பின் மகத்துவம் குறித்துப் பேசினார். பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.