ADDED : பிப் 12, 2024 05:23 AM
மதுரை: மதுரை காமராசர் பல்கலை தொடர்பியல் துறையினர் வருஷநாடு வெள்ளமலை அடிவாரத்தில் வைகை நதி கள ஆய்வுப் பயணத்தில் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை காமராசர் பல்கலை தொடர்பியல் துறை, தேசிய அறிவியல், தொழில்நுட்பத் தகவல் தொடர்பு மன்றம் சார்பில் ஐந்து நாள் பயிலரங்கம் நடந்தது. துணைவேந்தர் குமார் துவக்கி வைத்தார். இத்துறையின் பங்கேற்பாளர்கள் தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளிமலைப் பகுதியில் வைகை ஆறு உற்பத்தியாகி அடிவாரத்தில் உள்ள வாலிப்பாறை வழியாக பயணத்தைத் தொடர்வது குறித்தும், ஆறு பல்வேறு நகரங்களை கடக்கும் போது சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் விளக்கப்பட்டது. பேராசிரியர் நாகரத்தினம், ''வைகை ஆறு துாய்மையை பேண வேண்டும்'' என்றார். வைகை ராஜன் பேசுகையில், ''ஆறு நகர்ப்பகுதியில் பல்வேறு துாய்மை மற்றும் சுகாதாரக் கேடுகளைச் சந்திக்கிறது'' என்றார். பதிவாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.