/உள்ளூர் செய்திகள்/மதுரை/செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 28, 2024 04:41 AM
மதுரை : மதுரை கோரிப்பாளையத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் 400 மீட்டர் துாரத்திற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜன.28) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யானைக்கல் பாலம் வழியாக செல்லுார் செல்ல வேண்டிய இலகு ரக வாகனங்கள், பாலத்திற்கு கீழ் உள்ள சர்வீஸ் ரோடு, வைகை தென்கரை ரோடு, எம்.ஜி.ஆர்., பாலம், வைகை வடகரை ரோடு, கபடி சிலை ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
யானைக்கல்லில் இருந்து செல்லுார் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள், சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை, எம்.ஜி.ஆர்., பாலம், வைகை வடகரை ரோடு வழியாக செல்ல வேண்டும்.