ADDED : செப் 26, 2025 03:49 AM
நவராத்திரி விழா ஊஞ்சல் அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, நித்யா அருணாச்சலத்தின் சொற்பொழிவு, மாலை 4:30 மணி, கலை விழா, காலை 8:00 மணி முதல்.
கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண சுந்தரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:30 மணி முதல்.
கூடலழகர் கோயில், மதுரை, உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் மதுரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, கொடிமர மண்டபம் முன் வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி.
சூரியபகவான் அட்சயபாத்திரம் திரவுபதி அம்மனுக்கு அருளுதல் அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி.
மலைமகள், அலைமகள், கலைமகள் அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
அபிராமி அலங்காரம்: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, கொலு மண்டபத்தில் அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.
கிருஷ்ண துலாபார அலங்காரம்: நவநீத கிருஷ்ணன் கோயில், பால்மால் குறுக்குத்தெரு, மகால் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி முதல்.
பத்ரகாளியம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, தமிழ் சிவாவின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி.
சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விஷேச அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, பரதநாட்டியம்: நிகழ்த்துபவர்கள் - நாட்டியகலாலய மாணவிகள், இரவு 7:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கொலு வைத்தல், சிறப்பு பூஜை, காலை 10:00 மணி.
மகா வராகி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காளபரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.
அன்னபூரணி அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.
அர்ஜூனன் தவம் செய்து பாசுபதாஸ்திரம் சிவபெருமானிடம் பெறும் அலங்காரம்: திரவுபதி அம்பாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
அரவிந்தவள்ளி தாயார் அலங்காரம்: தேவி முத்தாலம்மன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, நிருத்யாலயா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டியம், மாலை 6:00 மணி.
மதுரை நகரத்தார் விடுதியில் சுவாமிக்கு மாரியம்மன் அலங்காரம், ஆராதனை, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.
மாணிக்கம் விற்ற லீலை அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மாலை 6:00 மணி.
அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, கொலு வைத்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சணை, கூட்டு வழிபாடு, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.
கருமாரியம்மன் அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி முதல், நவராத்திரி விசேஷ பூஜைகள், இரவு 10:00 மணிக்கு மேல்.
யானை வாகன அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி முதல்.
ராஜராஜேஸ்வரி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, காஞ்சி காமகோடி பீடம் முள்ளிப்பள்ளம் கிளை, கோ பூஜை, காலை 9:00 மணி, காமாட்சி அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.
ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, பஜனை, ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், ஆரத்தி, புஷ்பாஞ்சலி, காலை 8:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி, கடஸ்தாபனம், இரவு 7:30 மணி.
சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பூஜை, காலை 6:30 மணி, இசை நிகழ்ச்சி: வாய்ப்பாட்டு - மதுஸ்ரீ, வைதேகி, குரு விஜயா ஸ்ரீராம், வயலின் - ஜெகதீசன், மிருதங்கம் - விக்னேஷ், ஏற்பாடு: சின்மய தேவி குழு, மாலை 6:30 மணி.
ஜெயந்தி நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, கெஜேந்திர மோட்ச அவதாரம், மாலை 6:00 மணி.
ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, ருக்மணி சத்யபாமா உடன் நவநீதகிருஷ்ணன், ராமாயணச்சாவடி, காலை 8:00 மணி, கோவர்த்தனகிரி, மாலை 4:00 மணி, கண்ணாடி சப்பரத்தில் கோவர்ததனகிரி நான்கு மாசி வீதி உலா, இரவு 8:00 மணி.
நவராத்திரி சிறப்பு வழிபாடு: லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.
கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள், ரதத்திற்கு முகூர்த்தக்கால் நாட்டல், காலை 10:15 மணிக்கு மேல் 11:00 மணிக்குள்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை, அபிஷேகம், தீபாராதனை, காலை 10:30 மணி, வராஹி அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, மாலை 6:00 மணி.
குரு வாரம் முன்னிட்டு சிறப்பு பூஜை: மகாபெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம் மற்றும் வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சரஸ்வதி பூஜை சிறப்பு அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், ஏற்பாடு: செப்சிரா, சேவாலயம் மாணவர் இல்லம், மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கும் விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் பிரவீன்குமார், தலைமை: கல்லுாரி தலைவர் உமா கண்ணன், முன்னிலை: தாளாளர் ஹரி தியாகராஜன், மாலை 4:30 மணி.
பெண்மை 2025 கருத்தரங்கம்: தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஓபன்மதுரை ஏ.ஐ., சமூகம், மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, கூகுளின் சேவ் மாம் அமைப்பு, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.
சமூகப்பணிக்கான எதிர்காலம் குறித்த கருத்தரங்கம்: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, துவக்கவுரை: முதல்வர் ஜெயக்குமார், தலைமை: செயலாளர் தர்மசிங், சிறப்புரை: மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் கல்லுாரி முதல்வர் ராஜாசாமுவேல், காலை 9:30 மணி.
நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம்: கோவில்பாப்பாகுடி, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, முன்னிலை: மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, மதியம் 3:00 மணி, உடல்நலமும், யோகாவும் கருத்துரை: நிகழ்த்துபவர் - உடற்கல்வி ஆசிரியை ஷீபா ஜெயராணி, ஏற்பாடு: அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00 மணி.
நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம்: அரசு உயர்நிலைப்பள்ளி, கொடிமங்கலம், தலைமை: மதுரைக் கல்லுாரி வாரியப் பள்ளிகள் தலைவர் சங்கரன், முன்னிலை: செயலர் பார்த்தசாரதி, சிறப்பு விருந்தினர்: மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, காலை 11:00 மணி.
நாட்டுநலப்பணித்திட்ட முகாம்: சாமநத்தம், முகாமை துவங்கி வைப்பவர்கள்: மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, முன்னிலை: தாளாளர் ரெஜினாமேரி, ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காலை 9:30 மணி.
நாட்டுநலப்பணித்திட்ட முகாம்: கோட்டையூர், முன்னிலை: மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், ஏற்பாடு: கருமாத்துார் கிளாரட் மேல்நிலைப்பள்ளி, மாலை 6:00 மணி.
நாட்டுநலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா: ராஜாக்கூர், தலைமை: மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, பள்ளிக்குழு தலைவர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிராஜ், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.மேல்நிலைப்பள்ளி, காலை 9:30 மணி.
நாட்டு நலப்பணித்திட்ட முகாம்: மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம், எல்.கே.டி., நகர், சிலைமான், தலைமை: ஊராட்சி தலைவர் சாகுல் ஹமீது, முன்னிலை: ஓட்டல் ராயல் கோர்ட் உரிமையாளர் யாசின் முகம்மது, ஏ.ஆர்.கே., பிரிக்ஸ் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: சி.புளியங்குளம் அரச மேல்நிலைப் பள்ளி, காலை 10:30 மணி.
புத்தக கண்காட்சி: வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, திருவிழான்பட்டி, சிறப்பு விருந்தினர்: மதுரை காந்தி மியூசியம் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், காலை 9:00 மணி.
26வது பட்டமளிப்பு விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பட்டம் வழங்குபவர்: மதுரை குவாலிட்டி நிட் வேர்ஸ் நிர்வாக இயக்குனர் குமரன் ஜகுவா, காலை 10:25 மணி.
பொது 'மதுரை ரீஜினல் ஹப்' துவக்க விழா: அண்ணா பல்கலை மதுரை வளாகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் தியாகராஜன், பங்கேற்பு: தமிழ்நாடு தகவல்தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலர் பிரஜேந்திர நவ்நீத், பள்ளி உயர்கல்வித்துறை செயலர் சங்கர், ஐ.டி.என்.டி., தலைமை செயல் அலுவலர் வனிதா வேணுகோபால், ஏற்பாடு: தமிழ்நாடு தகவல்தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, காலை 11:00 மணி.
பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்: வசந்த வினோதன் ஹால், லுார்து நகர், மதுரை, தலைமை: மின்வாரிய கோட்ட கண்காணிப்பாளர் ரெஜினாமேரி, காலை 11:00 மணி.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம்: தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை விருந்தினர்கள்: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், ராஜேந்திரன், கவுரவ விருந்தினர்: கலெக்டர் பிரவீன்குமார், சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, ஏற்பாடு: தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை, பெஸ்ட் ஆப் தமிழ்நாடு, காலை 10:00 மணி.