மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பண்டிகை முன்பணம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் நாகராஜன், ஜெயபால், வீரபத்திரன், மாரிமுத்து, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.