ADDED : செப் 22, 2025 03:15 AM
கோயில் ஜெயந்தி, நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, குதிரை வாகனத்தில் ராஜாங்க சேவை, இரவு 7:00 மணி.
ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, புள்ளின் வாய்ப்பிளத்தல் திருக்கோலம், காலை 8:00 மணி, பரமபதநாதன் அலங்காரம், மாலை 4:00 மணி, வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீதியுலா, இரவு 9:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
நவராத்திரி விழா கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண சுந்தரவள்ளி தாயார் உற்ஸவ புறப்பாடு, மாலை 6:00 மணி.
பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, பேச்சியம்மனுக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மன் அலங்காரம், சாவித்திரி பாலசுப்பிரமணியனின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி.
தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, அம்பாளுக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மன் அலங்காரம், மாலை 6:00 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.
சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, நாதஸ்வர வித்வான் கணேசவேல் குழுவின் இசை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கொலு வைத்தல், சிறப்பு பூஜை, காலை 10:00 மணி.
ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, பஜனை, ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், ஆரத்தி, புஷ்பாஞ்சலி, காலை 8:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.
சின்மயா மிஷன், டோக் நகர், கோச்சடை, மதுரை, லலிதா சஹஸ்ரநாம பூஜை, காலை 6:30 மணி, திஸ்ரத்வனி இசை அறக்கட்டளையினரின் இசை வாத்திய நிகழ்ச்சி, ஏற்பாடு: சின்மய தேவி குழு, மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நவராத்திரி சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம், இரவு 8:00 மணி.
பள்ளி, கல்லுாரி நுாலக புத்தக கொலு திருவிழா: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் கவிதா, ஏற்பாடு: வி.பி.ஆர்.ஜி., நினைவு நுாலகம், காலை 10:30 மணி.
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கேப்ரான் ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரப்பாளையம், மதுரை, ஒருங்கிணைப்பு: ஜெயன்ட்ஸ் குரூப் ஆப் மதுரை துணைத் தலைவர் ஜெயமோகன், காலை 9:00 மணி.
மினர்வா 2025 - துறைகளுக்கு இடையேயான போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, காலை 10:00 மணி.
ரத்த தானம், கண் தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, திருப்பரங்குன்றம், சிறப்பு விருந்தினர்: நிர்வாக அறங்காவலர் கணேஷ் முருகன், ஏற்பாடு: ஜீவநதி அறக்கட்டளை, லயன்ஸ் கிளப் ஆப் மெல்வின், காலை 10:30 மணி.
பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், காலை 10:00 மணி.
நுண் திறன் முன்னோடி மேம்பாட்டு திட்டம் துவக்க விழா: பெட்கிராட் வளாகம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: நிர்வாக இயக்குநர் சுப்புராமன், துவக்கி வைப்பவர்: கவுன்சிலர் செல்வி, ஏற்பாடு: இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், மதியம் 12:00 மணி.