/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை அரசு மருத்துவமனையில் இலவச டெங்கு கொசு உற்பத்தி மையங்கள் கட்டடங்களுக்கு பஞ்சமில்லை; பராமரிப்புக்குத் தான் பஞ்சம் மதுரை அரசு மருத்துவமனையில் இலவச டெங்கு கொசு உற்பத்தி மையங்கள் கட்டடங்களுக்கு பஞ்சமில்லை; பராமரிப்புக்குத் தான் பஞ்சம்
மதுரை அரசு மருத்துவமனையில் இலவச டெங்கு கொசு உற்பத்தி மையங்கள் கட்டடங்களுக்கு பஞ்சமில்லை; பராமரிப்புக்குத் தான் பஞ்சம்
மதுரை அரசு மருத்துவமனையில் இலவச டெங்கு கொசு உற்பத்தி மையங்கள் கட்டடங்களுக்கு பஞ்சமில்லை; பராமரிப்புக்குத் தான் பஞ்சம்
மதுரை அரசு மருத்துவமனையில் இலவச டெங்கு கொசு உற்பத்தி மையங்கள் கட்டடங்களுக்கு பஞ்சமில்லை; பராமரிப்புக்குத் தான் பஞ்சம்
ADDED : செப் 23, 2025 04:24 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி செய்யும் மையங்களாக வார்டு பகுதிகள் மாறி வருகின்றன.
டீன் அலுவலகம் செல்லும் வழியில் அகச்சுரப்பியல் துறை அருகே மூன்று வார்டு நோயாளிகளுக்கான கீழ்த்தள காத்திருப்பு அறை உள்ளது. அதன் உட்பகுதியில் மழைநீர் வடிகால் செல்லும் குழாய்களில் ஆங்காங்கே சிமென்ட் சிலாப்கள் பெயர்ந்தும் பாதிக்கு மேல் குழாய்கள் திறந்தநிலையில் உள்ளன.
திறந்துள்ள குழாய்களில் மழை பெய்யும் போது டெங்கு வைரஸ் பரப்பும் கொசுக்கள் வேகமாக முட்டையிட்டு எளிதாக பெருக வாய்ப்புள்ளது. இதன் மேல் தளத்தில் தான் டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டும் உள்ளது.
பராமரிப்பு பூஜ்யம் தான் மருத்துவமனையின் பாரம்பரிய கட்டடத்தின் அனைத்து பின்புற சுவர்களிலும் 'ஏசி' கழிவுநீர் நேரடியாக வழிந்து பாசிபடர்ந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
தொடர்ந்து நீர்க்கசிவதால் கட்டடங்களின் ஸ்திரத்தன்மை பாதிக்கிறது. நீர்க்கசிவு டீன் அலுவலகம் செல்லும் முன்புறத்திலேயே தொடங்குகிறது.
மேலும் அடுத்தடுத்த மேல் தளங்களுக்கு செல்லும் பி.வி.சி., குழாய்களின் இணைப்பு சரியாக பொருந்தாததால் அதன் வழியாக கழிப்பறைகளுக்கு செல்லும் தண்ணீரும் சுவர்களில் கசிகிறது.
அதேபோல தீவிர விபத்து அவசர சிகிச்சை பிரிவு (டி.சி.சி.,) வளாகத்தின் பின்பக்க சுவர்களில் பச்சை வண்ண கோலமிட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் இருந்து தரைப்பகுதி மழைநீர் வடிகால் வரை 'ஏசி' அறைகளின் கழிவுநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. சுவர்களில் ஆங்காங்கே விரிசலும் காணப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகமோ, இவற்றை பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ இதுவரை கண்டு கொள்ளவில்லை.
பல நுாறு கோடிகளில் திட்ட மதிப்பீடு தயாரித்து கட்டடம் கட்டுவதோடு வேலை முடிந்து விடாது. அவற்றை முறையாக பராமரிப்பதில் தான் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை உறுதியாகும். இங்கே கட்டடங்களுக்கு பஞ்சமில்லை, பராமரிப்புக்குத் தான் பஞ்சம் என்பது போல உள்ளது.
கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால்களில் முழுமையாக சிமென்ட் சிலாப் அமைத்து மூட வேண்டும். 'ஏசி' கழிவுநீரை வெளியேற்றுவதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.