ADDED : செப் 23, 2025 04:24 AM

சுகாதாரக்கேடு
மதுரை எச்.எம்.எஸ்., காலனி, ஜானகி நகர் நியூ காலனி 3வது, 4வது குறுக்கு தெருக்களில் பாதாள சாக்கடை மூடியை மாற்றும் பணிக்காக தோண்டிய குழியிலிருந்து கழிவுநீர் வெளியேறு வதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராகவன், எச்.எம்.எஸ்., காலனி
சாக்கடை அடைப்பு
மதுரை எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோயில் பகுதியில் அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது. மழை நேரங்களில் கழிவுநீர் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலசுப்பிரமணியன், எல்லீஸ் நகர்
மோசமான ரோடு
மதுரை எம்.கே.புரம் பிரதான ரோடு பல ஆண்டுகளாக மோசமாக உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் விபத்துக்குள்ளா கின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அருண், ஜெய்ஹிந்த்புரம்
ஆபத்தான பாலம்
மதுரை தெற்குவாசல் பாலத்தின் அடித்தளம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வி, வில்லாபுரம்
தெருநாய் தொல்லை
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் தெருநாய்கள் தனியாக செல்வோரை துரத்திச் சென்று தாக்குகின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜான்சன், ஆரப்பாளையம்
* மதுரை திருமோகூர் ஏ.பி.ஆர்., நகரில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணிகண்டன், திருமோகூர்
தெருநாய்களால் ஆபத்து
கருப்பாயூரணி காளிகாப்பான் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. ஒரு மாதத்திற்குள் 3 குழந்தைகளை நாய் கடித்து பாதிக்கப்பட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
- மலர்மங்கை, கருப்பாயூரணி
வீணாகும் குடிநீர்
மதுரை - தேனி காளவாசல் சிக்னல் அருகே ரோட்டில் குடிநீர் இணைப்பில் இருந்து நீர் கசிந்து வீணாகிறது. மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணப்பன், காளவாசல்
சுகாதாரக்கேடு
மதுரை காமராஜர் 2வது தெரு, கட்டபொம்மன் நகர் ரோடு பகுதிகளில் குப்பை நிரம்பி வழிகிறது. இதனால் சுகாதாரக்கேடு உண்டாகி குடியிருப்போர் பாதிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமமூர்த்தி, பீபிகுளம்