ADDED : செப் 13, 2025 04:30 AM
திருமங்கலம்: வேடர்புளியங்குளம் கட்டட தொழிலாளி சரவணன் 44. இவர் மாமனார் ராமநாதபுரத்தில் இறந்தார்.
ஆக.31ல் சரவணன் குடும்பத்துடன் அங்கு சென்றார். நேற்று முன்தினம் வீடுதிரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 1. 50 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போனது தெரிந்தது. ஆஸ்டின்பட்டி போலீஸ் விசாரிக்கின்றனர்.