ADDED : செப் 13, 2025 04:30 AM

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பை தடகளப் போட்டி நடந்தது.
அறிவுசார் குறைபாடு உடையோருக்கான 100 மீட்டர் குண்டு எறிதல், எறிபந்து, பார்வையற்றோருக்கான 100 மீட்டர் குண்டெறிதல், வாலிபால் போட்டி, கை, கால் பாதித்தோர், உயரம் குறைந்தோருக்கான 100 மீட்டர் குண்டு எறிதல், வீல்சேர் டேபிள், இறகுப்பந்து போட்டி, காது கேளாத, வாய் பேசாதோருக்கான 100 மீட்டர் குண்டு எறிதல், கபடி போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா, ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விளையாட்டு விடுதி மேலாளர் முருகன், பயிற்சியாளர்கள் குமரேசன், ரஞ்சித் குமார், தீபா கலந்து கொண்டனர்.