/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் நீர்வளத்துறைக்கு எப்போதும் 'பய மயம்'; வனத்துறை விலை நிர்ணயம் செய்யாததால் இழுபறி நிலை சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் நீர்வளத்துறைக்கு எப்போதும் 'பய மயம்'; வனத்துறை விலை நிர்ணயம் செய்யாததால் இழுபறி நிலை
சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் நீர்வளத்துறைக்கு எப்போதும் 'பய மயம்'; வனத்துறை விலை நிர்ணயம் செய்யாததால் இழுபறி நிலை

பயம் போகலை
இது மாநில அளவில் எல்லா மாவட்டங்களிலும் எதிரொலித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். வனத்துறை மூலம் நீர்வளத்துறை, பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் நட்டிருந்தால் வனத்துறையிடம் வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் சீமை கருவேல மரங்களை உள்ளூர் மக்களிடமே ஏலம் விடலாம் என அரசாணையும் உள்ளது.
28 வழக்குகள் பதிவு
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியது:
தானாக வளர்ந்த சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை அனுமதி தேவையில்லை தான். ஆனால் அந்த மரங்களுக்கான ஏல விலையை வனத்துறை தான் நிர்ணயிக்க வேண்டும். நாங்கள் வனத்துறைக்கு கடிதம் அனுப்பினால் பதில் பெற ஒரு மாதம் வரை தாமதமாகிறது. மதுரையில் எல்லா கண்மாய்களும் சங்கிலித்தொடர் முறையில் பாசன கண்மாய்களாக உள்ளன. மழை பெய்து தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விட்டால் கண்மாய்கள் நிறைந்து விடும். மறுபடியும் நீர் வற்றிய பிறகு வனத்துறை அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். கேட்டால் வேலைப்பளு என்று காரணம் காட்டுகின்றனர்.