ADDED : ஜூலை 02, 2025 01:26 AM
மதுரை : மதுரை ஜெய்ஹிந்துபுரம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) கிளை சார்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
துணைத்தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தென்மண்டல தலைவர் அமுதன், மாவட்ட தலைவர் பக்தவத்சலம், பொருளாளர் கோதண்டராமன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சக்ரபாணி, செல்வி, நந்துகாமாட்சி, எல்.ஐ.சி., ரவி மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கிளை பொருளாளர் சுப்ரமணியன், மகளிரணி செயலாளர் ராஜம்மீனாட்சி, இணைச் செயலாளர்கள் உமா, சித்ரா, இணைச் செயலாளர் ரகுராம், நிர்வாகிகள் ரங்கநாதன், ராகவேந்திரன், முத்துலட்சுமி, உத்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.